புதன், 16 மார்ச், 2011

. இவைகளைச் சொல்லிப் பழகுங்கள் பல தடவை சொல்லிப் பாருங்கள்.


தமிழை உங்களால் நன்றாக உச்சரிக்க முடியவில்லையா? ல, ழ் பிரச்சனையா
கவலையே படாதிங்க, சகலவற்றிற்கும் ஒரு முடிவு. பின்வரும் வாக்கியங்களை சொல்லிப் பழகுங்கள்,பலதடவை சொல்லிப் பாருங்கள்.
விரைவாகச் சொல்லிப் பாருங்கள்,நாளடைவில் நீங்களும் ஒரு பேச்சாளராகலாம். 
    
அரலும் புள்ள அலறும் 

அலறல் நெஞ்சை கிளரும். 

கால் உருள கார் உருளும் 
கார் உருள நீர் உருளும் .

காசும் மாசும் கூசும் 
தூசை வீசிப் பூசும்.

சலசலத்த புணல் வெளிக்குள் 
கலகலக்கும் நாணல்கள்.

கரை புரண்ட வெள்ளமும் 
வரை கடந்த கோபமும்
தீரா இடும்பை தரும்.

அருவிக்கரையில் குருகு 
அணலில் உருகும் மெழுகு.

கலை பெருகு சிலை அழகு 
உலவு கடல் அழகு.

அலையுது அலை அலையில வலை 
வலையில வாளை.

கரி படுக்க பரிமட்டம் 
கனிபளுக்க கிளி கொத்தும்.

கதலி அலறும் கழனி கதறும் 
சுற்றும் காற்று நிற்குமா.

கோரைப்புல்லில் சாரை 
கீரியை பார்த்து சீறும். 

அரிவும் பரியும் சொரியும் 
குருதிப்புனலில் தொலையும் நதியும்.

கலை களைஞ்சா பயிரேறும் 
தலை களைஞ்சா புகேழறும்.

பரிபாயும் செருவிலே 
எரிபாயும் சருகிலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக