வியாழன், 17 மார்ச், 2011

உலகம் உன்மீது உமிழும்

                                


விழிகள் விழும் பாதையிலே  
   விரையும் மனிதா நில் 
குழிகள் நிறைந்த வழியில் 
       குருதி உறைந்து வீழ்வாய் 
பழிகள் விரைந்து படரும் 
        பகல் உன்மீது உமிழும் 
ழிவு சேர்க்க வேண்டம்
      இனிய வாழ்க்கை வாழு 

தழுவி மகிழ மனைவி 
      தடைகள் உண்டோ உனக்கு 
நழுவிச் சென்று ஏனோ 
     நடை பாதை நாட்டம் 
புழுதி படிந்த புனல் 
     புரிந்தும் ஏன் தாகம் 
கழுவி ஊற்றிய நீரிலுனை 
      கழுவ ஏன் விருப்பம் ?

எருமை மாடு நீயல்ல
       எந்தச் சேற்றிலும் விழுந்தெழும்ப 
 அருமையாக பகுத்து அறியும் 
         அறிவைப் பெற்ற பக்கியவன் 
பெருமையாக வாழ்வதை விட்டு
         பிழையான உறவை நாடி 
தெருநாய் போல் திரிந்து 
         தேடிப் பெறதே எய்ட்ஸை.

1 கருத்து: