சனி, 19 மார்ச், 2011

வயதுக்கு வந்துவிட்டாய் .....
மகளே! செல்லக்கிளி!!
மறந்திடாதே
நீ
மலர்ந்து விட்டாய்!

மிட்டாய் வாங்கவென
மீசைஅண்ணன்
தட்டிக்கடைக்கு
தவறியும்
போய்விடாதே
முன்பு
ஆசையோடு
கன்னத்தைக்கிள்ளி
அன்பு மிட்டாய்
தருவார்
இப்போ...........
நீ
வயதுக்கு வந்துவிட்டாய்!

சுட்டிப்பயல்களோடு
சட்டிக்கோடு
விளையாட
இனிப்
போக முடியாது
நீ
முன்பு
நெற்றிப் பொட்டில்
சில்லை வைத்து
ரைட்டா ?.... ரைட்டா ?....
என்று
கேட்டு வருவாய்
அப்போது கண்களெல்லாம்
உன்
காலைப் பார்க்கும்
ஆனால்
இப்போ
நீ
வயதுக்கு வந்துவிட்டாய்

மகளே,
நற் பண்பு
நான்கோடு
நீ வாழ
நான் கோடு

போடுகிறேன் 
இக் கோட்டுள்
நீ வாழ 
எக்கேடும் 
நெருங்காது 
இவையெல்லாம் 
ஏன் என்றால்
இப்போ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக